தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் சங்கமித்தால்...
-c.bastin
date: 13.1.13
முன்னுரை:'உழைக்கமனமில்லாத எவரும்; உண்ணலாகாது'(2 தெச.3:10), என்ற பவுலடியாரின் கூற்று இன்றைய நவீன காலத்தில் உழைக்ககூடிய தொழிலாளார்கள் பட்டினியால் சாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலைக்கு காரணம் அவர்கள் ஒருங்கிணைக்கப்படாதது தான் காரணம். இதனாலேயே அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தில் அவர்கள் பின்தங்கியுள்ளனர். ஒருங்கிணைக்கப்படாத அவர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் போராட வைத்து சமூக மதிப்பை அவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது அரக்கோணத்தை மையமாக் கொண்டு இயங்கி வரும் 'கிராமக் கல்வி வளர்ச்சி முன்னேற்ற இயக்கம்,' (ளுழஉநைவல கழச சுரசயட நுனரஉயவழைn யனெ னுநஎநடழிஅநவெ) (ளுசுநுனு). இந்த நிறுவனம் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வை அளிக்கின்றது. இந்த நிறுவனம் பற்றியும், இந்நிறுவனப் பணிகள் பற்றியும், இந்நிறுவனத்தின் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் இருளர் இன மக்களின் வாழ்வு நிலை, நம்பிக்கைள், அவர்களின் கலாச்சாரம் பற்றியும் இவ்வாய்வுக்கட்டுரையில் காண்போம்.
அலகு-1 SREDஇயக்கம் ஒரு பார்வை
1.1 பிண்ணணி:
'கிராமக் கல்வி வளர்ச்சி முன்னேற்ற இயக்கம்'(ளுசுநுனு) என்ற அமைப்பானது அரக்கோணத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களில், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி சாதி, மத, இன பேதமின்றி பல்வேறு மக்களின் பிரச்சனைகளைக் குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தோடு அருட்தந்தையர்கள் பெலிக்ஸ், சுகிர்தராஜ், மார்டின், மனோ மற்றும் செல்வி பெர்னார்டு பாத்திமா ஆகிய நால்வரும் இணைந்து சமூகப் பணிச் செய்ய விரும்பி ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கிப், பட்டித் தொட்டிகளில் தங்களது பணியினை செவ்வனே செய்தனர். சிறிது காலத்திற்குப் பின் பெண்களுக்காகவே பணி செய்ய விரும்பிய செல்வி. பாத்திமா 1979-ஆம் ஆண்டு கிராமக் கல்வி வளர்ச்சி முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த இயக்கமானது அறக்கட்டளைகள் பதிவுச்சட்டம் எண். 27,1975 கீழ் பதி;வுசெய்யப்பட்டு இன்று ஆலமரமாக பல கிளைகளை விரித்துப் பரந்துள்ளது.
1.2 நோக்கம்:
35 பணியாளர்களையும் , 9 ஒருங்கிணைப்பாளர்களையும் கொண்டு செயல்படும் இந்த இயக்கத்தின் நோக்கம் 'சாதி, மத, இன, பாலின பேதமின்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த பெண்கள் முன்னேற்றத்தைக் கொணர்வது' என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த இலக்கினை அடைய கீழ்காணும் துணை நோக்கங்களையும் கொண்டுள்ளது
1) பெண்களைச் சுய சார்புள்ளவர்களாக உருவாக்கவதன் மூலம் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக்கொள்ளச் செய்தல்.
2) பெண்களுக்குத் தொழில் நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்து சுய தொழில் செய்ய ஊக்கப்படுத்துதல்.
3) பெண்களுக்குத் தூய்மை, உடல்நலம் பேணுதல், குழந்தை வளர்த்தல் போன்ற அடிப்படை அறிவை வளர்த்தல்.
4) கிராமத்திலுள்ள அனைவருக்கும் கல்வி வழங்குவதன் மூலம் சமூக வளர்ச்சியை முடுக்கி விடுதல்.
5) பிற நிறுவனங்களோடும், அரசு சாரா அமைப்புகளோடும் கூட்டு வைத்துக்கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
1.3 பணிகள்
1.3.1 வீதி நாடகம்
1. பாடல், நாடகம், வழி சமூக பிரச்சனைகளைக் கண்டறிந்து விழிப்புணர்வு கொடுத்தல்
2. இயக்கச் செயல்பாடுகளை விளக்குதல்
3. சமூக, அரசியல், பொருளாதார சூழலை விளக்குதல்
4. கிராமப் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படல்.
1.3.2 கையாளப்படு;ம் உத்திகள்
1. பிரச்சனைகளை மையமாக வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துதல்
2. வாசகர் வட்டம் அமைத்தல்
3. கூட்டத்தை ஒருங்கிணைத்தல்
4. பிரச்சாரங்கள் செய்தல்
5. முற்;;றுகை செய்து அரசை நிர்பந்திப்பது
1.3.3 தலைமைத்துவப் பயிற்சி
1. பெண்களுக்குத் தலைமைத்துவப் பயிற்;சி
2. கிராமப் பஞ்சாயத்தில் போட்டியிட வைப்பது
3. குடும்பத்தில் முடிவெடுக்க வைப்பது
4. பிரச்சனைகளை எதிர் கொள்ள தைரியம் கொடுப்பது
5. மேடைப் பேச்சுப் பயிற்சி
6. காவல் துறையை அணுகும் பயிற்சி
அலகு-2
இயக்கங்கள் ஓர் அறிமுகம்
2.1 கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம்:
1980 இல் துவங்கப்பட்ட இவ்வியக்கமானது வேலூர், திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. திருத்தணியை மைய அலுவலமாகக் கொண்டு 380 கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. பெண் தலைமைத்துவத்தை வளர்த்தைடுத்தல் , அரசியலில் பங்கேறப்பு, குடும்ப வன்முறையிலிருந்து மீட்பு, பெண்களுக்கு நிலங்களை மீட்டுத் தருதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காவல் துறைக்கு கொண்டு செல்வது மற்றும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களைப் பெற்றுத் தருவது போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
2.2 மாட்டு வண்டி தொழிலாளர்கள் இயக்கம்:
1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கமானது மாட்டுவண்டி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுவர் போன்ற மாவட்டற்களில் இவ்வியக்கம் செயல்பட்டு வருகிறது.
2.3 கல் உடைப்போர் சங்கம்:
விவசாயம் அழிந்ததால் இடம் விட்டு இடம் பெயர்ந்து கல் உடைக்கும் தொழில்செய்யும் பணியாளர்களின் நலனைக் காக்க 1999 ஆம் ஆண்டு இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. கொத்தடிமைத் தனத்திலிருந்து அவர்களை மீட்டல், ரேசன் கார்டு, கண், கை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு நிவாரண நிதி பெற்றுத்தருதல், கூலி உயர்வு போன்ற பல்வேறு நலப்பணிகளைச் செய்து வருகிறது.
2.4 செங்கல் சூளை தொழிலாளர்கள்:
1997 இல் இருளர் முன்னேற்ற சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் இவர்களுடைய வாழ்வாதாரம் செங்கல் சூலையை மையப்படுத்தி இருக்கிறது. மேலும் ஒருங்கிணைக்கப்படா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் உரிமைகளை பெற்றுத்தர அயராது உழைக்கின்றது.
2.5 விவசாயிகள் சங்கம்:
நலிந்துவரும் விவசாயிகளின் நலனைக் காத்திட அரசு மூலம் பல்வேறு சலுகைகளையும், உயர்தர விதைகளையும் விவசாயிகளுக்குப் பெற்றுத் தருகிறது.
2.6 பெண்தொழிலாளர்கள் சங்கம்:
2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கமானது தெருக்கடை வியாபாரிகள், பூ வியாபாரிகள், கீரை, இட்லி வியாபாரிகள் நலனைப் பாதுகாத்து அவர்களின் கடன் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
2.7 மாத்தம்மா இயக்கம்:
பெண் குழந்தைகளுக்கு நோய் வந்தால் அந்தக் குழந்தைகளை மாத்தம்மா கோயிலுக்கு நேர்ந்துவிட்டு அவர்களுக்கு மாத்தம்மா என்றும், ஆண்களுக்கு மாத்தையன் என்றும் பெயரிடுவர். இவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தடுக்க 2002 ஆம் ஆண்டு மாத்தம்மா இயக்கம் உருவாக்கப்பட்டது.
2.8 திருநங்கைகள் சங்கம்:
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட திருநங்கைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமையை மீட்கவும் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் அரசு இவர்களுக்குத் தரும் மாதம் ரூ. 1000 பெற்றுத்தருதல் போன்ற உதவிகளை செய்துவருகிறது.
2.9 பாலியல் தொழிளாலர்கள்; சங்கம்:
பாலியல் தொழிலார்களும் மனிதர்களே என்ற மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு பெரிய சவாலாக உள்ள காவல்துறையினரிடமிருந்து அவர்களை விடுவித்து கூடை பிண்ணுதல், பழக்கடை, தையல் போன்ற மாற்றுத்தொழில் செய்ய உதவி செய்து வருகின்றனர்.
2.10 நரிக்குறவர்கள் இயக்கம்:
200 முதல் 300 நரிக்குறவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ப்படாத ஒரு சமூகத்திற்க்கு சமூக அந்தஸ்த்தையும். சுயமரியாதையையும் பெற்றுத்தர இச்சங்கம் பாடுபட்டு வருகிறது.
அலகு-3
நான் பெற்ற அனுபவங்கள்
1. ஒருங்கிணைக்ப்படாத தொழிலாளர்களிடமிருந்து அனுபவங்களைப் பெறுவதற்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல்வேறு மக்களையும் , பல்வேறு மக்களின் பிரச்சனைகளையும் அவைகளை தீர்க்க ளுசுநுனு எடுத்த பணிகளும் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
2. வு.ஊ. கண்டிகைக்குச் சென்று கல்லுடைப்போரின் பிரச்சனைகள் பற்றியும் விவசாயம் நலிவடைந்ததால் இடம் பெயர்ந்து குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களையும், அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி உழைப்பை உறுஞ்சும் முதலாளிகளையும் நேரில்கண்ட அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
3. சோளிங்கரில் பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், காவல்துறையால் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், பிழைப்பிற்காக தனது உடலையே முதலீட்டாக வைத்து தொழில் செய்யும் ஆஷா மற்றும் ஜெயா போன்ற பெண்களிண் பரிதாப நிலையும் என்னை மிகவும் பாதித்தது.
4. தணிக்கைப் போளுரில் நரிக்குறவர்களை சந்தித்தது, அவர்களும் சமுதாயத்தால் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய பார்வையை எனக்குத் தந்தது.
5. கோணலத்தில் நாகம்மாள் போன்ற பெண்கள் எவ்வாறு அந்த கிராமத்தின் தீண்டாமை பிரச்சனைகளுக்காகப் போராடினார்கள் என்பதையும் சாதாரண பெண்கள் எவ்வாறு இவ்வளவு பெரிய பிரச்சனைகளை சாதிக்க முடிந்தது என்பது எனக்கு வியப்பைத் தந்தது.
6. சாலை என்ற ஊரில் இயங்கி வரும் பாராஞ்சி பிர்க்கா விவசாயிகள் இயக்கம் எவ்வாறு மண்ணையும், மானத்தையும் காக்க போராடினார்கள் என்பதும், இப்போராட்டத்திற்காக அவர்கள் பயன்படுத்திய உத்திகளும் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
7. அரிகலம்பாடியில் இருளர்களையும், அவர்களின் அறியாமையையும், வரதட்சனை இல்லா முறை போன்றவை நல்ல அனுபவமாக இருந்தது.
8. காவேரிபுரத்தில் மாத்தம்மா பெண்களையும் அவர்களின் பிரச்சனைகளும் கேள்விப்பட்ட உடன் பரிதாபமாக இருந்தது. ஒரு சமூகத்தின் மூடநம்பிக்கையை எவ்வாறு மேல் சாதி மக்கள் தங்களது சுயஇச்சைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது வருத்தத்தையும் இந்த சமூகத்தின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியது.
9. திருநங்கைகளின் வாழ்க்கையும், அவர்களின் சடங்கு முறைகளையும் ராணி என்ற திருநங்கை மூலம் அறிய முடிந்தது. திருநங்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.
அலகு-4
இருளர்கள் ஒரு பன்முகப் பார்வை
4.1 சாதி:
ஈ.ஏ.எச். ப்ளணட்( நு.யு.ர். டீடரவெ) என்ற சமூகவியலாளர் சாதியை பின்வருமாறு வரையறை செய்கிறார். 'பிறப்பினடிப்படையில் தோன்றிய உறுப்பினர்களையும், ஒரு பொதுவான பெயரையும் கொண்ட ஒரு அகமனக் குழுவோ அல்லது அகமனக்குழக்களின் தொகுதியோ சாதி எனப்படும்' என்று வரையறை செய்கிறார்.
4.2 இருளர் பெயர்காரணம்:
இருளர் என்ற பெயர் இவர்களுக்குத் தொடக்கத்தில் இல்லை. புதிய இடங்களில் வாழ்ந்திடாமல் இருண்ட , அடர்ந்த காட்டுக்குள் சென்று வாழ முற்பட்டதால், அந்த இன மக்கள் இருளர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேடர் என்பதே தமிழ்நிலம் வழங்கியப் பெயர். பிறகு வௌ;வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்படலாயினர். மாடர், முதுவன், வில்லியன், வெல்லியன் மலநாடு இருளர், மலைதேச இருளர், வேட்டைகார இருளர், ஊராளி இருளர் எனவும் அழைக்கப்பட்டனர்.
பாலைநிலத்து மரமான பாலைமரத்தை இருளர்கள் இருள மரம் என அழைப்பார்கள். இவர்கள் தங்களை இருளமரத்தின் குழந்தைகள் என அழைத்துக்கொள்வதால் 'இருளர்' என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
4.3 மொழி:
இவர்கள் தமிழின் கிளை மொழியாகிய இருள எனும் மொழியை பேசுகின்றனர். 1884 ஆம் ஆண்டு ஸ்டுவர்டின் என்பரின் ஆய்வுப்படி 'இருளர்கள் கசுப-கசுவ-இருள எனும் கிளைமொழியைப் பேசுகின்றனர்' என்று கூறுகிறார்.
4.4 நம்பிக்கைகள்:
இருளர்களின் தெய்வங்கள் அந்தரி, மகிடற்காய்த்தாள, ஜயை, விந்தை, அம்பணத்தி, எண்டோளி, மாலுக்கிளையாள், பகவதி, சயமகள், பாலைக்கிழத்தி, கன்னியம்மா, சயமகள், பாலைக்கிழத்தி, கன்னியம்மா, எல்லையம்மா, வாட்படையாள், வனதேவதை எனப் பல பெயர்களில் கன்னித்தெய்வத்தை வணங்குகிறார்கள்.
ஏழு அவர்களுக்கு முக்கியான எண். மரம், செங்கல் அல்லது கருங்கற்களைக்கொண்டு ஒரே அளவில் ஏழு கற்;களை அமைத்து அவற்றை சப்தகன்னியர்களாக வழிபடுவர்.
அலகு-5
இறையியலாக்கம்
5.1 இருளர் விடுதலையை நோக்கி:
'என் மக்கள் படும் துன்பத்தை என் கண்ணால் கண்டேன்'( வி.ப.3:7) என்று ஆண்டவர் மோயிசன் வழியாக கூறியதன் நோக்கம் மக்கள் எங்கெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்களோ அங்கே கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இதே கருத்தை ' நீ துன்புறுத்தும் இயேசு நானே'(தி.ப.9:5) என்று இயேசு சவுலிடம் கூறுகிறார். இவற்றின் பின்னணியில் இருளர்கள் வாழ்வு இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு உரிமைகள் மறுக்கப்படுகிறது. இவர்கள் செங்கல் சூளையில் அடிமைகள் போல் குறைந்த கூலிக்கு வேலைசெய்கின்றனர். இவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்படுகிறது. 'ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும';(லூக் 4:18)என்ற இயேசுவின் விருதுவாக்கு இருளர்கள் வாழ்வில் நிறைவேறும் காலம் இவர்கள் வாழ்வின் பொன்னானக் காலம்.
5.2 பாம்பின் நண்பர்கள்
கி.மு.12 –ஆம் நூற்றாண்டு முதலே கனானேயர், பாபிலோனியர், எகிப்தியர் போன்ற நாடுகளில் பாம்பினைத் தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இருந்துவந்தது. இன்றும் பாம்பு வழிபாடு என்பது பரவலாக காணப்படக் கூடியது. 'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்ற பழமொழிக்கேற்ப. பாம்பின் மீது கொண்டுள்ள பயத்தால் அதை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளை மறந்து , மற்ற இனத்தவர்கள் வழிபட்ட பாம்பு உருவத்தை வழிபட்டனர். இத்தகைய சிலைவழிபாட்டை ஒழிக்க விரும்பிய தொடக்க நூல் ஆசிரியர் பாம்பு தெய்வமல்ல, சூழ்ச்சி நிறைந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக பாம்பை சூழ்ச்சியுள்ள பாம்பு' (தொ.நூ.3:1) என்று குறிப்பிடுகிறார். அதன் அடிப்படையில் இருளர்கள் பாம்பை வழிபடாமல் அவற்றை தங்களது செல்லப்பராணியாக வளர்த்து வருகிறார்கள். மேலும், பழைய ஏற்பாட்டில் எதிரிகளைக் குறிப்பதற்காக பாம்பினைப் பயன்படுத்துகிறார்கள். 'அவர்கள் பாம்பைப் போலவும், நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்' (மீக்.7:17).
'பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கிழைக்காது' (மாற் 16:18) என்ற இயேசுவின் வாக்கிற்கேப்ப இவர்கள் பாம்புகளைத் தம் கைகளால் பிடிப்பர். எந்த பாம்பு தீண்டினாலும் உடனே இவர்களைக் கொள்வதில்லை. பாம்பினைத் தனது நண்பனாகக் கருதி அதை வளர்த்துவருகிறார்கள்.
5.3 எண் ஏழு:
பழைய ஏற்பாட்டில் செமித்தியர்கள் ஏழாம்நாளை தீமையின் நாளாக கருதினர். அந்த எண்ணை உச்சரித்தாலே தீமை எனக் கருதினர். பாபிலோனியர்களிடமும் , கனானேயர்களிடமும், இஸ்ராயேல் மக்களிடமும் இந்த நம்பிக்கை இருந்தது. எனவே ஏழாம் நாள் செய்யும் வேலை பலனளிக்காது என்ற நம்பிக்கையில் ஏழாம் நாளை வேலையிலிருந்து விடுபடும் ஓய்வுநாளாக இஸ்ராயேல் மக்கள் கருதினர்( விப 23.12). ஆனால் இஸ்ரயேல் மக்கள் ஏழு என்ற எண்ணை முழுமையை குறிப்பதற்குப் பயன்படுத்தினர்.
இந்த அடிப்படையில் இருளர்களை நோக்கும் போது ஏழு என்ற எண் இவர்களுக்கு மிக முக்கியமான ஒரு எண்ணாக இருக்கிறது. இவர்கள் ஏழு சப்த கன்னியர்களைத் தெய்வமாக வழிபடுகின்றனர்.
முடிவுரை:
பிறரது துன்பங்களைத் தன்னுடைய சொந்த துன்பமாகக் கருதும் வழக்கம் பழங்குடிகளிடம் இருக்கிறது. நமக்கென்ன போச்சு அடுத்தவர்கள் தானே பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் எண்ணுவதில்லை. வசதிஇல்லாதவர்கள் வசதி படைத்தவர்களுக்கு உதவ வேண்டும். இது அவர்களது கடமை. வலிமையானது மட்டுமே வாழும் என்கிற டார்வினின் கொள்கையை இவர்கள் வேறுவிதமாக அர்த்தப்படுத்துகிறார்கள் என்னைவிட வலிமைக் குன்றியவனும் வாழ வேண்டுமானால் நான் அவனுக்கு உதவி புரிய வேண்டும். இவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அதிகம். இத்தகைய புரிதல்களால் எனது அனுபவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இணைந்தால் தங்கம் செய்யாததை சங்கமாக இருந்து சாதிக்க முடியும்.
துணைநின்ற நூல்கள்:
1. அகத்தியலிங்கம சு.பொ. சாதியம்.(சென்னை:பாரதி புத்தகாலயம், 2004).
2. குணசேகரன் க. இருளர்கள் ஓர் அறிமுகம் . (சென்னை: கிழக்குப் பதிப்பகம்,2008).